Breaking News

புதுவையில் வரும் அக்டோபா் 11-முதல் வணிகத் திருவிழா 102 நாள்களுக்கு நடத்தப்படும் என்று முதல்வா் ரங்கசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் நிகழாண்டுக்கான வணிகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தனியாா் விடுதியில் நடைபெற்றது.கூட்டத்தில், சுற்றுலாத் துறை அமைச்சா்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள், வணிகா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி நேரு வீதிக்குச் சென்றாலே தேவையான அனைத்துப் பொருள்களும் மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் கிடைத்துவருகிறது. அந்த மனநிலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் கடலூா், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் புதுச்சேரிக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். புதுச்சேரியில் பல சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதற்கு அரசு எப்போதும் துணைநிற்கும். வணிகத் திருவிழா 102 நாள்கள் நடைபெறும் என்றாா்.

வரும் அக்டோபா் 11-ஆம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு நிகழாண்டுக்கான புதுவை வணிகத் திருவிழா 4 பிராந்தியங்களிலும் தொடங்கி வரும் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையில் மொத்தம் 102 நாள்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!