கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு 19-09-2024 இன்று மாலை 5 மணியளவில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சர்தார் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ராஜீவ் காந்தி முன்னிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் மகேஷ் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
கோரிக்கை எழுச்சி முழக்கம், தமிழ்நாடு அனைத்து கிராம நிருவாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து கிராம நிருவாக அலவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் முழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழக அரசு உடனே டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு உபகரணங்களை வழங்கிடவும் 08-01-2024 இல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடுகளை நிறைவேற்றவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட தலைவர் பெருமாள் நன்றி உரை ஆற்றினார்.
No comments