Breaking News

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணை தலைவர் பிரேம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். இதில்  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 25 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!