ராகுல்காந்தியை தரக்குறைவாக விமர்சித்த எச்.ராஜாவை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்!
அந்த வகையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜ் கல்லூரி எதிரில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்து உரையாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ஏ.பி.சி.வீ. சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், ஐஎன்டியுசி தொழிற்சங்க அமைப்பு செயலாளர் ராஜ், தெற்கு மண்டல தலைவர் ராஜன், வடக்கு மண்டல தலைவர் சின்ன காளை, கிழக்கு மண்டல தலைவர் மிக்கேல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி, மகிலா காங்கிரஸ் மண்டல தலைவி பிரீத்தி, சாந்தி மேரி, மாவட்டத் துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், டேவிட் வசந்தகுமார், பிரபாகரன், அருணாசலம், விஜயராஜ், மாவட்ட செயலாளர்கள் குமார முருகேசன், ஜெயராஜ், வெங்கட் சுப்பிரமணியம், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் சாமுவேல் ஞானதுரை, செல்வராஜ், ஜான்சன், ஐஎன்டியுசி ராஜா, சுப்பிரமணியன், அந்தோணிசாமி, அழகுவேல், சித்திரை பால்ராஜ், சிவன், கிருஷ்ணன், யேசுபாக்கியம், மகாராஜன், முனியசாமி, மணி, முத்துப்பாண்டி, அந்தோணிச்சாமி, ஆரோக்கியம், முடிச்சூடி, சீனிவாசன், கமலா தேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments