திருவிடைக்கழி சுப்ரமணியசுவாமி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் செப்.15-ம் தேதி நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 1,500 ஆண்டுகள் பழமையான முருகப்பெருமானும் சிவபெருமானும் ஒன்றே என்ற அமைப்பில் ஒரே திருத்தலம் என்ற சிறப்புமிக்க சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான மற்றும் பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்ட இக்கோயிலுக்கு, நாள் தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருப்பணிகள் பெரிதும் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளது
வருகின்ற 12-ம் தேதி முதல் யாக பூஜை தொடங்கி நடைபெற உள்ளது. வருகின்ற 15-ம் தேதி காலையுடன் 6 கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, அன்று காலை காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
No comments