Breaking News

கடல் கடந்து ஜப்பான் நாட்டு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட திருவள்ளூர் இளைஞர்.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் நாடார். இவர்  திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் குடும்பத்துடன் தங்கி மளிகை வியாபாரம் செய்து வருகிறார். 

இவருக்கு ராஜகனி என்ற மனைவியும் ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் ராஜேஷ் பொறியியல் பட்டம் பெற்று ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் கடந்த நான்காண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியூகி என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். 

இதையடுத்து பெற்றோர் ஆசியோடு கடந்த எட்டு மாதங்களுக்கு முன் சென்னையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் நேற்று இவர்களது திருமணம் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமழிசையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. திருமணத்தில் திருமழிசை, துாத்துக்குடி, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி, சேலை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டது ஆச்சர்யத்தை ஆழ்த்தியது.

No comments

Copying is disabled on this page!