பட்டினச்சேரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வினை துவக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் "இத்திட்டம் சிறப்பான திட்டம் என்றும் இது உங்கள் ஊர்களை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் குறிப்பாக மாணவ மாணவிகள் இதை நன்கு உணர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் வளர தூய்மை முக்கியம் எனவும் தெரிவித்தார். கடலோரப் பகுதிகளில் குப்பைகளை அதிகம் கொட்டுவதால் கடல்கள் மாசு ஏற்ப்பட்டு கடலில் இருக்கும் அசுத்தத்தால் உங்கள் மீன் பிடித்தொழில் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொண்டு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மகளிர் மத்திய அரசின் தூய்மை உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் செந்தில்நாதன், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி ரெங்கநாதன், ஒருங்கிணைப்பாளர் பாலு (எ) பக்கிரிசாமி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கண்ணப்பன், மீனவ பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
No comments