புரட்டாசி மாத முதல் பௌர்ணமியை முன்னிட்டு இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பல்லாயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
ஆனால் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் இரவு தங்கி முருகனை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்று ஐதீகம். இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று புரட்டாசி மாத முதல் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது இரவு நேரத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் ஆயிரக்ககணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் தங்கியுள்ளனர். இவர்கள் இரவில் கடற்கரைப் பகுதியில் குடும்பம் குடும்பமாக சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் கடற்கரை மணலில் விளக்குகள் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments