ஓசூரில், தென்னிந்திய அளவிலான தனியார் சி. பி .எஸ். இ. பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் துவக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மதகொண்டப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான எம் எம்.எம்.எஸ், மாதிரிப்பள்ளியில் தென்னிந்திய அளவிலான மகளிர் கால்பந்து போட்டி தொடர் துவங்கியது.
நேற்று துவங்கிய இந்த போட்டிகள், 21ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 80க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 14 மற்றும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியினை ஷோபா, பிரசன்ன பாலாஜி, பள்ளியின் செயலாளர் மேரு உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
பல்வேறு கட்டங்களாக, நடைபெறும் இந்த போட்டிகளில் தென் மாநிலங்களான ஆந்திரா, கேரளா, தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகா, அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய மாநிலங்களில் இருந்து, தனியார் சி பி எஸ் இ பள்ளி மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றவர்களாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
No comments