ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழில் பேட்டையில் அமைச்சர்ஆய்வு மேற்கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் 28.09. 24 அன்று ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழில் பேட்டையில். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுவதையொட்டி விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து சிப்காட் பகுதியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் நேரில் பார்வை விட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரன்சுருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை ஜெயசுதா, டாட்டா நிறுவன பொதுமேலாளர் முத்துக்குமார், சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் தேவ பிரகாசம், உதவி பொது மேலாளர் அருண்குமார், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வகுமார், நெமிலி ஒன்றிய தலைவர் வடிவேலு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் உள்ளனர்.
No comments