திருச்செந்தூர் அருகே மணப்பாடு திருச்சிலுவை திருத்தல 445வது ஆண்டு பெருவிழா ஆயர் ஸ்டீபன்அந்தோணி தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை.
விழாவையொட்டி தினமும் காலை திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி, நவநாள் திருப்பலி, திருச்சிலுவை ஆசீர், மாலை 3 மணிக்கு ஜெபமாலை, மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் ஜெபமாலை மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்று வந்தது. 9ம் நாள் திருவிழாவான நேற்று ,காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை பவனி நடைபெற்றது. 10ம்நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலி நடந்தது. தொடர்ந்து மாலை 4.30மணிக்கு திருவனந்தபுரம் அருட்பணி பிரசாத் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது.
மாலை7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா ஆடம்பர மாலை ஆராதனை நடைபெற்றது. இதில் ஆலய பங்கு தந்தை லூர்து வில்சன்,உதவி பங்கு தந்தை ஜேம்ஸ் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாளை காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments