அன்று ஒரு நாட்டிற்கு அடிமையாக இருந்த நம் நாடு, இன்று வளர்ச்சி என்ற பெயரில் பல நாடுகளுக்கு அடிமையாக உள்ளது தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
சென்னையில் நடத்தப்படும் பார்முலா கார் பந்தையம் வசதி படைத்தவர்களுக்கான விளையாட்டு. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கார் பந்தையம் நடக்கும் பகுதியில் இரண்டு அரசு மருத்துவமனைகள் உள்ளது. அதையும் மீறி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி இந்த பந்தையம் நடத்தப்படுகிறது. இந்த பந்தையம் நடத்தும் நிதியில், அதன் அருகில் உள்ள சத்யவாணி முத்து குடிசை பகுதியை மேம்படுத்தலாம். சாலைகளை சீரமைக்கலாம். பழுதடைந்த பள்ளிகளை சீரமைக்கலாம். ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க காசு இல்லை என்கின்றனர். ஆனால், கார் பந்தையம் நடத்த நிதி எங்கிருந்து வந்தது.
இன்று பிற மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, ஒரே தேர்தல் என்ற பேசியவர்கள் இப்போது எங்கே சென்றனர். நாங்கள் தமிழர் என்று பேசியபோது இனவெறி என்றவர்கள். இப்போது ஏன் பேச மறுக்கின்றனர். வெளிநாட்டு முதலீடு மூலம் 10 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வந்து, 31 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பதை நீங்கள் நம்புகிறீர்களா. இருந்துமு 9 லட்சம் கோடி கடன் எதனால் வந்தது. அன்று ஒரு நாட்டிற்கு நம் நாடு அடிமையாக இருந்தது. இன்று எல்லா நாட்டிற்கும் அடிமையாக இருப்பதை வளர்ச்சி என்று கட்டமைக்கிறார்கள்.
இதற்கு முன்னால் கொண்டு வந்த முதலீடுகள் என்ன ஆனது. இதன் மூலம் வரும் முதலாளிகள் தமிழர்களுக்குத்தான் வேலை அளிப்பார்கள் என்பது உறுதியுள்ளதா? தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறை, கொலை போன்றவைகளுக்கு மது போதைதான் காரணம். போதையில்தான் அத்தனையும் நடைபெறுகிறது. எனவே, அதனை ஒழிக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது, ஹீமாயுன், சாட்டை துரைமுருகன், வழக்கறிஞர் சிவா மற்றும் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments