Breaking News

புதுச்சேரி மணவெளி தொகுதியில் ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை சபாநாயகர் செல்வம் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் மணவெளி தொகுதிக்குட்பட்ட டி.என் பாளையம் முதல் அபிஷேகப்பாக்கம் வரை உள்ள பிரதான சாலையை  ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது. தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,சபாநாயகருமான செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன்,பொதுப்பணித்துறை அதிகாரிகள்,தொகுதி முக்கிய நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!