சீர்காழி அருகே ரூ.7 கோடியில் சாலை விரிவாக்கப்பணி கோட்டபொறியாளர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு,பூம்புகார் செல்லும் சாலை விரிவாக்கப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் ஆய்வு செய்தார்.
சீர்காழி அருகே சூரக்காடு பகுதியிலிருந்து நவகிரக புதன் ஸ்தலமான திருவெண்காடு, வரலாற்று சுற்றுலா தலமான பூம்புகார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை ரூ.7கோடி செலவில் சுமார் 4 கி.மீ தூரம் 7மீட்டர் நீளத்திற்கு விரிவாக்கம் செய்து புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள், சுற்றுலாபயணிகள், பக்தர்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக சென்றுவரமுடியும்.
இந்த சாலை பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் அறிவுறுத்தலின்படி, கோட்டபொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சாலையின் தரம் மற்றும் நீளம்,தடிமன் ஆகியவற்றை அளவீடு செய்து பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் தெய்வநாயகி,உதவி பொறியாளர் பிரவீணா ஆகியோர் உடனிருந்தனர்.
No comments