Breaking News

உயர் அதிகாரிகள் வாடகை கார்களை பயன்படுத்தி ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்து வரும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தலையிட்டு தடுக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலகங்களில் பழைய கார்களை சரி செய்யாமல், ஓட்டுநர் இல்லை என்று காரணம் கூறி,அரசு உயர் அதிகாரிகள் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு உள்ள புதுச்சேரியில் வாடகை கார்களை, தங்களது சொந்த வேலைகளுக்காக பயன்படுத்தி மக்கள் வரிப்பணத்தை தொடர்ந்து விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட அரசு கார்களை பயன்படுத்துவதை ஆளுநர் தடை செய்ய வேண்டும். 

துறைவாரியாக அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ள அரசு வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேல் பல துறைகளில் ஏலம் விடாமல் அரசு வாகனங்களை மாற்றும் நிலையில் உள்ளது. உடனடியாக அதை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி இல்லை என்று காரணம் காட்டும் அரசு நிதி சிக்கனத்தை கையாள தவறிவிட்டது. இது தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி.

No comments

Copying is disabled on this page!