சீர்காழி அருகே வடரங்கம் ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேக தின விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடரங்கத்தில் ரெங்கநாயகி உடனாகிய ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானதாகும். இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு வருடம் ஆன நிலையில் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக தின விழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு ஆலயத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு அதனைக்கொண்டு ரெங்கநாதர் மற்றும் ரெங்கநாயகிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அனுமன், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் ரமேஷ் ஐயர் மற்றும் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.
No comments