திண்டிவனம் கோட்டத்தைச் சார்ந்த வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான புத்துணர்வு பயிற்சி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான புத்துணர்வு பயிற்சிக்கு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். விதைகள் சட்டம், முளைப்புத்திறன், பிறரக கலப்பு, ஈரப்பதம், பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள், உரிம கட்டணம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
உரக்கட்டுப்பாட்டு சட்டம், மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள் குறித்தும், உரிமம் பெறுவது குறித்தும், பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல், பி.ஓ.எஸ் மிஷின் மூலம் பட்டியலிடுதல், இருப்பு மற்றும் விலை விபரங்களை நன்கு தெரியும்படி எழுதி வைத்தல் குறித்தும்,பூச்சி மருந்து சட்டங்கள் குறித்தும் மரக்காணம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் எடுத்து கூறினார்.
விதைகளில் மாதிரிகள் எடுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் அதன் மீதான நடவடிக்கை குறித்து விதை ஆய்வாளர் ஜோதிமணி எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மயிலம், ஒலக்கூர், செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் மற்றும் வானூர் பகுதிகளை சார்ந்த வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் 80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments