புதுச்சேரியைச் சோ்ந்த 2 பேரை மா்ம நபா்கள் ஏமாற்றி ரூ.10.35 லட்சத்தை மோசடி செய்தது குறித்து சைபர் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிநாதன். இவா் இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முயற்சித்துள்ளாா். அப்போது தென்பட்ட பங்குச்சந்தை நிறுவன கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டுள்ளாா். அதில் பேசிய மா்மநபா் கூறியபடி சுவாமிநாதன் இணைய வழியில் ரூ.4.35 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்தார்.
புதுச்சேரியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரை மா்ம நபா் குறிப்பிட்ட கைப்பேசி வாட்ஸ்-ஆப் குழுவில் இணைத்துள்ளாா். அதன்படி மா்மநபா் அனுப்பிய செயலியில் பணம் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய ராஜ்குமாா் ரூ.6 லட்சத்தை அனுப்பியுள்ளாா். ஆனால், அவரால் அதை திரும்ப பெறமுடியவில்லை. இதுகுறித்து ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் இணையகுற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனா்.
No comments