புதுச்சேரியில் ஆட்சியாளர்களின் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஆறு, கடற்கரை பகுதிகளை மீட்க கவர்னர் உத்தரவிட வேண்டும் அதிமுக கோரிக்கை.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி அரசின் பரிந்துரையின் பேரிலேயே மின்துறை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் மின்கட்டண உயர்வுக்கு காரணம் என சபாநாயகர் செல்வம் தவறான தகவல்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் இது தொடர்பாக அதிமுகவுடன் விவாதம் செய்ய சபாநாயகர் செல்வம் தயாரா? என சவால் விடுத்தார்.
சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் ஆட்சியாளர்களின் துணையோடு கடந்த 10 ஆண்டுகளாக ஆறுகள்,பாண்டி மெரினா உட்பட கடற்கரை பகுதிகள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதுடன் அங்கு சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக குற்றம் சாட்டிய அன்பழகன்,தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை மீட்க, துணை நிலை ஆளுநர் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments