புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் செப்.16-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்க வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவின்படி, புதுச்சேரியில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, செப்.15-ஆம் தேதி விடுமுறை நாளாக இருப்பதால், அடுத்த அலுவலக நாள்களில் இந்த குறைதீா் முகாம் நடைபெறும்.
எனவே, நிகழ் மாதத்துக்கான பொதுமக்கள் குறை தீா் தினம் வரும் செப்.16-ஆம் தேதி காலை 10 மணிக்கு வழுதாவூா் சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments