மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்களிடம் தங்கள் கோரிக்கை சார்ந்த மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டார்.
சில மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கிறிஸ்துவ பெண்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார் அப்பொழுது துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
No comments