தலித் மக்களுக்கான சிறப்புக்கு கூறு நிதியை விதிகளுக்கு முரணாக பிற துறைகளுக்கு செலவிடுவதை கண்டித்து காரைக்காலில் ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
தலித் மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை விதிகளுக்கு முரணாக பிற துறைகளுக்கு செலவிடுவதை கண்டித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதியை அந்த நிதியாண்டுக்குள் செலவழிக்க வேண்டும் வலியுறுத்தியும் ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு சார்பில் காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிலவழகன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு துணை இயக்குனரை உடனடியாக நியமிக்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள 13 விடுதிகளில் போதுமான வசதியும், காப்பாளரும் நியமிக்க வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு நான் கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வின்சன் ஒருங்கிணைப்பாளர் சூர்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments