சிறுத்தைகள் கட்சியை கண்டித்து தூத்துக்குடியில் ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அருந்ததியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் இடஒதுக்கீடு உரிமையில் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கின்ற வகையில் உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதித் தீர்ப்புக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்திருப்பதை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஆலோசனையின்படி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்ட தலைவர் சந்தனம் வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட செயலாளர் காயல் முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை வகித்து கண்டன உரையாற்றினர். தி.க. மண்டல பொறுப்பாளர் பால்.ராசேந்திரன், திராவிடர் தமிழர் கட்சி பொதுச் செயலாளர் நெல்லை கதிரவன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பிரசாந்த், கட்டபொம்மன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சுஜித், திராவிடர் கழக மாவட்ட தலைவர் முனியசாமி, தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேமா.சந்தனராஜ் (எ) இம்மானுவேல் சேகரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அசன், ஆதித்தமிழர் பேரவை கலை இலக்கிய அணி மாநில செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments