புதுச்சேரயில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பாண்டி மெரினா பொழுதுபோக்கு மையத்தின் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம் கடற்கரை அருகே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு மையம் மற்றும் உணவு மையங்கள் கட்டப்பட்டு கடந்த திமுக - காங்கிரஸ் ஆட்சியில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது. பாண்டி மெரினா என்ற பெயரில் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு மையம், தொடர்ந்து சில ஆண்டுகளாக கடற்கரை பகுதிகள், மீனவ பகுதிகள் மற்றும் சதுப்பு நில காடுகளை அழித்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், சட்ட விரோத கூடாரமாக இருப்பதாகவும், இதனால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.மேலும் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அதனை ஏற்காமல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அவ் வழியாக வந்த பொது மக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பக்கத்து மீனவ கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், போராட்டக் களத்திற்குள் பைக்குடன் புகுந்ததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் அவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
No comments