காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் இளைஞர்களுக்கான கோழி வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி.
நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சு.ரவி "வேளாண் அறிவியல் நிலையத்தில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகிறது, அதன் ஒரு பகுதியாக இன்று இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள அனைவரும் இந்தப் பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இப்பயிற்சியின் மூலம் கற்றுக் கொண்ட தொழில்நுட்பங்களை சுய தொழிலாக செய்து சமூகத்தில் பெரிய அளவில் முன்னேர வேண்டும் என கிராமப்புற இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார். அடுத்தாக புதுச்சேரி மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஜோச்ப் ஆல்பெட் இணையவழி மூலம் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, தொழில்நுட்ப உரையாற்றிய வேளாண் அறிவியல் நிலையம் தொழில்நுட்ப வல்லுநர் (கால்நடை) மருத்தவர். பா.கோபு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) முனைவர். வி.அரவிந்தன் கோழி வளர்ப்பு மற்றும் அதன் பசுந்தீவனம் வகைகள் பற்றியும் கிராமப்புற இளைஞர்களிடையே உரையாற்றி பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியில் கிராமப்புற இளைஞர்கள் அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். பயிற்சிக்கு வந்திருந்தவர்களை வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ.கதிரவன் வரவேற்றார். பயிர் பாதுகாப்பு துறை தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் சு திவ்யா நன்றி கூறினார்.
No comments