இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று விமர்சனம் செய்த பாஜக பொறுப்பு குழுத் தலைவர் எச். ராஜாவை கண்டித்து குடியாத்தம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. சுரேஷ்குமார் தலைமை தாங்கினார் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் செல்வகுமார் நித்தியானந்தம் தனசேகர் பேர்ணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹ்மத் பள்ளிகொண்டா பேரூர் தலைவர் அக்பர் பாஷா ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்
இந்தக் கூட்டத்தில் குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கே. மோகன்ராஜ் மாநில பொதுக்குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர், பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் அப்துல் அக்பர் சிறப்புரையையும் இந்த நிகழ்வில் தேவகி ராணி முனிசாமி ராஜேந்திரன் சக்கரவர்த்தி பாரத் நவீன் குமார் MD. ராகிப் மற்றும் பலர் கலந்து கொண்டு எச். ராஜாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன் மற்றும் சமூக ஊடகப்பிரிவு தலைவர் யுவராஜ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நவாலி மாவட்ட விவசாய அணி பிரித்தலைவர் ராஜசேகர் மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல் மாவட்ட ஓபிசி அணித் தலைவர் ஜலந்தர் மாநில எஸ் சி பிரிவு செயலாளர் சுப்ரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments