புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 4 எஸ்.பி-க்கள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் குற்ற சம்பவங்களுக்கு காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.மேலும் சிறையில் உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் வெளியில் உள்ளவர்களுடன் தொலைபேசி மூலமாக பேசுவதாகவும் அவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகம் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சிறையில் காவல்துறையினரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
இருந்த போதும் காலப்பட்டு மத்திய சிறையில் உள்ள ரவுடிகள் தொலைபேசி வாயிலாக புதுச்சேரியில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு மாமூல் கேட்டு மிரட்டல் விடுவதாக பல்வேறு ரகசிய தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் நான்கு காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 40க்கும் மேற்பட்ட போலீசாருடன் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையால் சிறைச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments