ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பு சம்பவத்தின் போது போலீசார் தகாத வார்த்தைகளால் இளைஞர்களை திட்டியதாக சார் ஆட்சியரிடம் புகார் மனு.
சுமார் பத்து மணிக்கு மேல் இளைஞர்கள் சென்று கொண்டிருந்ததை பார்த்து அப்பகுதி சிப்காட் காவல் நிலைய தலைமை காவலர் அன்பழகன் என்பவர் இளைஞர்களை சந்தேகத்தின் போரில் விசாரணை நடத்தியபோது அவர்களை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர்கள் சிவசேனா மற்றும் இந்து ஜனசேன அமைப்பின் மாநில அமைப்பாளர் முரளி மோகன் கவனத்திற்கு இந்த தகவலை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து முரளி மோகன் தலைமையில், அன்பரசன் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான இளைஞர்கள் ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்காவை சந்தித்து, விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுக்கு பிறகு அமைதியாக வீடு திரும்பி கொண்டு இருந்த இளைஞர்களை போலீசார் கடுமையாக தகாத வார்த்தைகளால் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மனு அளித்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments