பகுத்தறிவு தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி அரசு சார்பில் "பகுத்தறிவு தந்தை" பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், சாய்.ஜெ. சரவணகுமார்,அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம்,சட்டமன்ற உறுப்பினர்கள் கேஏஸ்பி ரமேஷ், பாஸ்கர் என்கிற தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக அமைப்பாளருமான சிவா தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், அதிமுக மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் ஆகியோர் தனித்தனியாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்பி ரவிக்குமார், புதுச்சேரி மாநில முதன்மை செயலர் தேவ. பொழிலன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், பெரியார் திராவிடர் கழகத்தினர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் பொதுநல அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments