காரைக்கால் பார்வதிஸ்வரன் கோயில் நில மோசடி சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாடும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் பேட்டி.
தேர்வு முறையில் வர வேண்டும் என்பதை அவர் ஏற்றுக் கொள்வது இல்லை எனவும் தெரிவித்த அவர், முதலமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு எந்த வித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் வேலை கொடுத்ததன் விளைவு இன்று புதுச்சேரி மாநிலத்தை பற்றி சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து பேசி உள்ளதாகவும் இதற்கு முழு பொறுப்பு ரங்கசாமி தான் எனவும் அவர் தெரிவித்தார்.
காரைக்கால் பார்வதிஸ்வரன் கோயில் நிலங்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளது சம்பந்தமாக ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சி நாடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுபோல நீதிமன்றம் கோயில் சத்துக்களை அபகரித்தாலோ அல்லது பொது சொத்துக்களை அபகரித்தாலோ வன்மையாக கண்டிப்பதாகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரங்கசாமி அரசு அறிவிப்பு அரசுதான் என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முதலமைச்சர் மாநில அந்தஸ்து பெறுவதாக சொன்னார் இதுவரை நடந்துள்ளதா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலின் போது கூட்டணியில் இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறுவதாகவும் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு மாநில அந்தஸ்து கொடுப்பதாக தெரிவித்தார். கொடுத்தார்களா? புதுச்சேரி கடனை தள்ளுபடி செய்வதாக தள்ளுபடி செய்வதாக சொன்னார்களே! செய்தார்களா? 2000 கோடி அதிகமாக நிதி தருவதாக சொன்னார்களே! செய்தார்களா? புதுச்சேரியை மத்திய நிதி கமிஷனில் சேர்ப்பதாக சொன்னார்களே செய்தார்களா? ரேஷன் கடையை திறந்தார்களா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் விவகாரத்தில் நீதிமன்றம் முதலமைச்சரை அலுவலகத்திற்கு செல்லக்கூடாது கோப்புகளை பார்க்கக் கூடாது என தெரிவித்துள்ளதாகவும் ஒரு முதலமைச்சருக்கு நீதிமன்றம் இதுபோல உத்தரவு போட்டால் எந்த முதலமைச்சர் பதவியில் இருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இது முதலமைச்சருக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழுக்கு எனவும் அதனால் தான் அவர் பதவி விலகுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் தேவதாஸ், மாவட்டத் தலைவர் சந்திரமோகன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மலா, மகிளா காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் மல்லிகா, துணை பொது செயலாளர் ஜெயந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments