ஜார்கண்டில் நடைபெறும் தேசிய அளவிலான பாரா எரிபந்து போட்டிக்கு காரைக்கால் மாற்றுத்திறனாளி வீரர்கள் தேர்வு பயண செலவை ஏற்று நிதி உதவியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனிடையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் அனைவரும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜார்க்கண்டில் நடைபெறும் போட்டிக்கு சென்று வருவதற்கு பயண செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்று உதவ வேண்டுமென மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் கடந்த வாரம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து ஒருங்கிணைப்பாளர் பாலு (எ) பக்கிரசாமி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளின் பங்களிப்பில் மாற்றுத்திறனாளிகள் 16 பேரின் பயண செலவு தொகை திரட்டப்பட்டு, பயண செலவுத் தொகையை மாவட்ட ஆட்சியர் முனைவர் மணிகண்டன் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் வழங்கினார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் பாரா எரிபந்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெறுவதுடன் சாதனை புரிய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். மேலும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
No comments