போச்சம்பள்ளி பகுதியில் பப்பாளி விலை திடீரென உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான ஜிம்மாண்டியூர், சுண்டகாபட்டி, கண்ணன்டஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பப்பாளி விவசாயம் நடந்து வருகிறது. பெரும்பாலும் ரெட் லேடி என்னும் ரகத்தை பயிரிட்டுள்ள விவசாயிகள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
சராசரியாக கிலோ ரூ.10 முதல் 12 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், இந்த மாதம் கிலோ ரூ.30க்கு விற்கப்படுவதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை போகாத செப்டம்பர் மாதத்தில் திடீரென விலை உயர்வுக்கு, நகரங்களில் மருத்துவர்களின் பரிந்துரை பப்பாளியாக இருப்பதே காரணம் என வியாபாரி கூறியதாக ஜிம்மாண்டியூர் கிராமத்தில் பப்பாளி விவசாயம் செய்து வரும் விவசாயி ஶ்ரீராம் தெரிவித்தார். இந்த மாதம் சராசரியாக ரூ.12 விற்கப்படும் நிலையில் ரூ.30க்கு எடுக்கப்படுவதால் விவசாயிகள் ஏக சந்தோஷத்தில் உள்ளனர்.
No comments