Breaking News

புதுச்சேரியில், பெண் உட்பட 6 பேரிடம் 3.45 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.


புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி,இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே பகுதி நேரத்தில், ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 2.04 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.அதே போல, திருபுனை பகுதியை சேர்ந்த மோனிகா ரூ.24 ஆயிரம்  அனுப்பி ஏமாந்தார், தொடர்ந்து, தன்வந்திரி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், அயோத்தியில் தங்குவதற்கு, ஆன்லைன் மூலம் விடுதியை தேடி அதில் ஒரு நபரிடம் பேசி ,விடுதி அறையை புக் செய்து, கொடுக்க ராஜ்குமார் 49 ஆயிரம் ரூபாய் அனுப்பி அந்த மர்ம நபரிடம் ஏமாந்தார்.

மேலும், லாஸ்பேட்டையை சேர்ந்த ஆஷிக்கிடம் 45 ஆயிரம் ரூபாய்,பிள்ளைச்சாவடியை சேர்ந்த சேரன், 10 ஆயிரம் ரூபாய், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜிவ்காந்தி 13 ஆயிரம் ரூபாய் மர்ம நபரிடம் அனுப்பி ஏமாந்துள்ளனர்.இதுகுறித்து, 6 பேர் நேற்று கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர். 

No comments

Copying is disabled on this page!