Breaking News

காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்களிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.


காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூபாய் 12 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியர்  மணிகண்டன் ஜிப்மர் நிர்வாகத்திற்கு வழங்கினார். இதில் ஜிப்மர் இயக்குனர் டாக்டர். ராகேஷ் அகர்வால் ஓ.என்.ஜி.சி சர்பில் கணேசன், சி.எஸ்.ஆர் தரப்பில்  டாக்டர்.விஜயகுமார், காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனையின் டீன் டாக்டர் சாகா உள்ளிட்டவர்கள் மற்றும் மருத்துவர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் "அரசு மருத்துவமனைக்கு ஜிப்மர்  மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கு ஜிப்மர் நிர்வாகம் மூலம் அதிக நிதி வழங்குகிறது. கிராமப்புற பகுதிகளில் மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் முகாம்களில் ஜிப்மர் டாக்டர்கள் அதிக மருத்துவ சேவைகளை செய்கின்றனர். 

ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவைகளுக்கு ஜிப்மர் மருத்துவர்கள் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.  இளம் மருத்துவர்களாகிய நீங்கள் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை புரிய வேண்டும்  எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும்  சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் சமூக வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் திட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். 

No comments

Copying is disabled on this page!