ஈரோட்டில் கேரள மக்கள் வீடுகளில் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கேரளா மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் மலையாள மொழி பேசும் கேரள மக்களால் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது ஈரோட்டில் வாழும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை யொட்டி அதிகாலையில் எழுந்து நீராடி கேரள பாரம்பரிய புத்தாடை அணிந்து வீடுகளில் பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு அத்தப்பூ கோலமிட்டு அதில் விளக்கேற்றி வழிபட்டனர். ஈரோட்டில் ரயில்வே ஊழியர் வீட்டில், 5 மணி நேரம் செலவிட்டு கேரள பாரம்பரிய கதகளி கலைஞரின் உருவபடத்தை தத்ரூபமாக வண்ண மலர்களால் வடிவமைத்திருந்தனர்.
கேரளாவை ஆண்ட மாவலி மன்னன் ஆண்டிற்கு ஒருமுறை நாட்டு மக்களை காண வருவதாக ஐதீகம். மாவலி மன்னனை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி ஓனம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். பண்டிகையின் 10.ம் நாளான இன்று மாவலி மன்னனை வரவேற்று வழிபட்டனர். அத்தப்பூ கோலத்தை சுற்றி பெண்கள் திருவாதிரை களி நடனமாடி மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை போல் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் உறவினர்களுடன் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர், அண்டை வீடுகளில் வசிக்கும் தமிழர்களையும் விழாவிற்கு அழைத்து இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கி மகிழ்ந்தனர்.
No comments