Breaking News

உளுந்தூர்பேட்டை ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓனம் பண்டிகை.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி பகுதியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓனம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடபட்டது, இந்நிகழ்விற்கு கல்லூரியின் தாளாளர் முனைவர் க.ஜெயராமன் அவர்கள் மற்றும் பொருளாளர் சாந்தி ஜெயராமன் அவர்கள்  தலைமை தாங்கினர். கல்லூரியின் செயலாளர் JSA  அருண் மற்றும் நிர்வாக இயக்குனர் கண்மணி அருண் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் இயக்குனர் திரு.அ. மகேஸ்வரன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். 

கல்லூரியின் முதல்வர் முனைவர் பிரபா  அவர்கள் முன்னிலையாற்றி  ஓனம் பண்டிகை பற்றி எடுத்துரைதார் தொடர்ந்து மாணவிகளின் நடன நிகழ்ச்சி மற்றும் இன்றைய காலகட்டங்களில் பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணம்  சிறந்ததா அல்லது காதல் திருமணம் சிறந்ததா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினர், இதில் இரு தரப்பில் மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர் ஏராளமான மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர் இந்நிகழ்ச்சியில்  தொடர்பு அலுவலர் பாலசந்திரன் மற்றும் இருபால் பேராசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.

No comments

Copying is disabled on this page!