திண்டிவனம் இரயில் நிலையம் அருள்மிகு ஓம் அரசடி விநாயகர் கோவில் 61-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மகா அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இரயில்வே நிலையம் அருள்மிகு ஓம் அரசடி விநாயகர் திருக்கோயில் 61-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும மூலவர் ஓம் அரசடி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் ஓம் அரசடி விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மூலவர் பஞ்சமுக திபாரதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments