சீர்காழி அருகே கடை வாசலில் முதியவர் கழுத்து அறுத்து படுகொலை.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சீர்காழி காவல் ஆய்வாளர் புயல். பாலச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முகமது ரஃபீக்கிற்கு அபுரோஜா கனி என்ற மனைவியும், இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
மனைவி மகன், மகள் ஆகியோருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பெட்டிக்கடையில் வசித்து வருவதாக தெரிய வருகிறது. தொடர்ந்து போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிரமாகவிசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்தவரின் மகனான முகமது யூசுப் உள்ளிட்ட மூன்று பேரிடம் காவல்துறை செய்து வருகின்றனர்.
No comments