புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நியாய ஒலி திட்டத்தினை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் நீதித்துறையின் கீழ் நியாய ஒளி என்ற திட்டத்தை நிறுவியது. நியாய ஒளி திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை சட்ட விழிப்புணர்வு வழங்குவதற்காக சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.
அதன் ஒருபகுதியாக பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் நியாய ஒளி கிளப் துவக்க விழா இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் வீரமோகன், அம்பேக்கர் அரசு சட்ட கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு நியாய ஒளி கிளப்-ஐ துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து தொடர்ந்து நியாய ஒளி திட்டத்தின் கீழ், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இம்முகாமில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments