ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளின் 2024 -2025-ம் கல்வி ஆண்டிற்கான B.Ed மற்றும் M.Ed., முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா.
இவ்விழாவிற்கு ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக்குழுமத்தின் தலைவர், கல்வி ஆலோசகர், அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் S.சுப்பையா தலைமையேற்று தலைமை உரையாற்றும்போது 18வது ஆண்டு வகுப்புகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது கல்லூரி ஆரம்பித்த 16 ஆண்டுகளில் 16 தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களை உருவாக்கிய கல்லூரி. இங்கு பயின்றவர்கள் அரசு மற்றும் பல்வேறு முக்கியப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றார்கள்.
ஒரு நாட்டில் கல்வி சிறப்பாக இருந்தால் தான் அந்த நாடு அனைத்துத் துறைகளிலும் சிறந்து வல்லரசாக திகழ முடியும். அதற்கு சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியரின் கடமையாகும். .மேலும் எந்த நாடு ஆசிரியர்களை மதிக்கின்றதோ அந்த நாடும், நாட்டு மக்களும் முன்னேறுகிறார்கள். ஆசிரியர்கள் எல்லோரும் தியாக மனப்பான்மையோடு சேவை செய்து பள்ளி வகுப்பறையில் உள்ள குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைத்து கற்பித்து மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்கி நாட்டையும் சமுதாயத்தையும் சிறப்பாக உருவாக்குவது ஆசிரியரின் முக்கிய கடமையாகும் என தனது தலைமை உரையில் கூறினார்.
B.Ed மற்றும் M.Ed., முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி கலந்துகொண்டு B.Ed மற்றும் M.Ed முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கியும் சிறப்புரையாற்றினார்கள், அவர் தனது சிறப்புரையில் ஆசிரியர் தொழில் என்பது உன்னதமான தொழில், ஒரு ஆசிரியருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவென்றால், ஒரு சிறந்த மாணவரை உருவாக்கி, சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதுதான். வறுமையை ஒழிப்பது கல்வி என்பதை எவரும் மறக்கக் கூடாது, மனம் சுத்தமாக இருந்தால் கல்வி அழகாகிவிடும் ஆசிரியரான நீங்கள் இன்று கைதட்டுவராக இருப்பவர்கள் நாளை கைதட்டு பெறுகின்ற ஆசிரியர்களாக நீங்கள் மாற வேண்டும். இந்த உலகம் யாரை அதிகம் நம்புகின்றது என்றால் அது ஆசிரியர்கள்தான். சிறந்த ஆசிரியர்களைத்தான் இந்த சமுதாயம் எதிர்பார்க்கின்றது. ஆகவே நீங்கள் சிறந்த ஆசிரியர்களாக மாற வேண்டும். ஆசிரியர் என்பவர் எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்றால், மாணவர்கள் மனதில் நிலைத்து இருப்பவர்கள் தான் இந்த சமுதாயத்தில் உயர்ந்திருப்பார்கள். ஆசிரியர்களின் முக்கியமான வேலை என்னவென்றால் மாணவர்களிடம் என்ன திறமை ஒளிந்து இருக்கின்றதோ அந்த திறனை வைத்து அவர்களை உயர்த்துவது தான் சிறந்த ஆசிரியரின் கடமை என்று தனது சிறப்புரையில் கூறினார்.
இவ்விழாவில் ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக்குழுமத்தின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், என 500 பேர் கலந்துகொண்டார்கள். இறுதியாக ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் SP. வித்யா அவர்கள் நன்றியுரை கூற விழா நிறைவு பெற்றது.
No comments