உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பொது சுகாதார ஆய்வக கட்டிடம் கட்டும் பணியை சட்ட மன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ட்ராமாகேர் கட்டிடத்தில் முதல் தளத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார கட்டிடம் கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜீவ், அரசு மருத்துவர் சதா வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர் முருகவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments