Breaking News

பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி வெட்டி படுகொலை கொலை செய்த மர்ம நபர்களுக்கு குறித்து போலீசார் விசாரணை.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனுக்கு உட்பட்ட பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காளையார் வயது 56. இவர் விறகு வெட்டும் தொழிலாளியான இவர் இன்று வழக்கம் போல் பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள கண்மாயில் விறகு வெட்டுவதற்காக சென்றுள்ளார் அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காளையாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர் இதில் காளையார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்த பூவந்தி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காளையார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Copying is disabled on this page!