Breaking News

திண்டிவனம் மூங்கிலம்மன் கோயில் வீதி ஸ்ரீசுந்தர விநாயகர் ஆலயம் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மூங்கிலம்மன் கோயில் வீதியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிருக்கும் ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம் ஜீர்ணோர்த்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை நான்காம் கால பூஜை மற்றும் நாடி சந்தனம் தத்துவா அர்ச்சனை, நாமகரணம்,அங்கவார்பணம், அஷ்ட திரவிய ஹோமம், விசேஷ மூலிகை ஹோமங்கள்  ஆகியவை நடைபெற்றது. 

தொடர்ந்து அர்ச்சணை, நாமகரணம், அங்குரார்பணம் அஷ்ட திரவிய ஹோமம் ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  மஹாபூர்ணாஹுதி, செலுத்தி  மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கரகம் புறப்பாடு காலை 8:30 மணி அளவில் நடைபெற்றது. காலை 8:45 மணி அளவில் ஸ்ரீ சுந்தர விநாயகர் கருவறை விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சுந்தர விநாயகர் மகா அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில்  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய தர்மகத்தா கிருஷ்ண கவுண்டர்,ஸ்ரீ மூங்கில் அம்மன் ஆலய தர்மகர்த்தா ரவிச்சந்திரன் கவுன்சிலர்,மற்றும் திண்டிவனம் நகர் மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!