மங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பங்கூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பங்குர் பகுதியில் மங்கலம் தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் வில்லியனூர் மாவட்ட தலைவர் ஓம் அனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பாரதப் பிரதமரின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
No comments