விரைவில் உதவி ஆய்வாளர்தேர்வு நடத்துவதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும். - அமைச்சர் நமச்சிவாயம்.
உதவி ஆய்வாளர் தேர்வில் 2 ஆண்டுகள் வயது வரம்பு வேண்டி ஒரு சிலர் நீதிமன்றம் சென்றுள்ளதால் தேர்வு நடைபெறாமல் உள்ளதாகவும், விரைவில் தேர்வு நடத்துவதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டண உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மின் கட்டணத்திற்கு மானியம் வழங்குவதற்க்காக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
விரைவில் மின் கட்டணத்திற்கான மானிய குறித்த அறிவிப்பு வெளியிடபடும். காவலர்கள் இடம் மாற்றத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. இன்றோ நாளையோ உத்தரவு வெளியிடப்படும், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வேண்டும் என்றே ஆதாரம் இல்லாமல் அரசியல் காழ்புனர்ச்சி காரணமாக என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவகிறார். -
No comments