Breaking News

மிலாடி நபியை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும்: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத்.


மிலாடி நபியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில வரும் 17ஆம் தேதி மதுபானக் கடைகள், பார்களை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், மிலாடி நபியை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடை மற்றும் பார் விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)ன் படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் பார்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 ஆகிய உரிம தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். 

மேலும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தல், மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!