கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.
அறிக்கையில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டு துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக - நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம், நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை அருகே, அரியலூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வருகின்ற 28.09.24, சனிக்கிழமை, அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை/பொறியியல், டிப்ளமோ, நர்சிங், ஐடிஐ ஆகிய படிப்புகளுக்கு 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் 10000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை, நேரடி நேர்காணல் மூலம் நிரப்பப்படவுள்ளது. எனவே நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments