Breaking News

மயிலம் அடுத்த ரெட்டணை மற்றும் ஆலகிராமம் ஆகிய அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் செஞ்சி. மஸ்தான் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த ரெட்டணை 133 மற்றும் ஆலகிராமம் 57 அரசு மேல் நிலை பள்ளிகளில் +1 பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகின்ற இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மயிலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு மிதி வண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் சால்வை அணிவித்து ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். 


மேலும் இதில் முன்னாள் எம்.எல்.ஏ சேதுநாதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன்,பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலையரசன், ரவி, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் நெடி.சுப்பிரமணியம், மாவட்ட அமைப்பாளர்கள் அன்சாரி,செந்தில்குமார்,ஊராட்சி மன்ற தலைவர்கள் குமுதா ரமேஷ்,ஆலகிராமம் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜ்பரத், கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் சேகர்,சந்திரன் ,குமார்,தில்லை கோவிந்தன்,சரவணன், சங்கர்,நிர்மல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!