"மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியர்" காரைக்கால் கொன்னகாவலி கிராமத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சியர்.
காரைக்கால் மாவட்டத்தில் நகரங்களுக்கு இணையாக வளர்ச்சியை கிராமங்களும் பெற வேண்டும், கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அங்குள்ள பிரச்சனைகளுக்கு நேரடியாக தீர்வு காண்பதற்காகவும் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தால் "மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியர்" என்ற திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொன்னக்காவலி கிராமத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கொன்னக்காவலி, கூழ்குடித்த அக்ரஹாரம், புளியந்தோப்பு, கழுகுமேடு, காந்திநகர், வ.உ.சி. நகர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சுத்தமான குடிநீர், தெரு விளக்குகள், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரும்படி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அப்பகுதி மக்களுடன் மதிய உணவு உட்கொண்டார்.
No comments