திண்டிவனத்தில் ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர காவல் உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் மற்றும் காவலர் கார்த்தி ஆகிய இருவரும் திண்டிவனம் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது திண்டிவனம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை போலீசார் விசாரணை செய்தனர். அந்த நபர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் இதனை அடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார் அவன் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அந்த நபர் பையை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அதில் அரை கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவனை போலீசார் சிறிது தூரம் துரத்தி சென்று லாபகமாக மடக்கி பிடித்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்த போது அந்த வாலிபர் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் அப்பு என்கின்ற இளஞ்செழியன் (21), என்பதும் சென்னையிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாருக்கு கஞ்சாவை விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
No comments